Skip to main content

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்.. (படங்கள்)

Published on 12/01/2021 | Edited on 12/01/2021


 

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

 

அதில், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850,  அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம், மருத்துவப் படி மற்றும் இலவச பஸ்பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பெருந்திரள் போராட்டம் நடத்தினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளுக்கு ஆபத்தான நிலையில் அங்கன்வாடி மையம்; மவுனம் காக்கும் அதிகாரிகள்

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

cuddalore district keezhathanur anganwadi centre renovation request form village people 

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள  கீழ ஆதனூரின் மையப்பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருவதோடு, அவர்களுக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் அரசு வழங்கும் மதியஉணவு, சத்துமாவு, முட்டை ஆகிய ஊட்டச்சத்து பொருட்கள் இந்த மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்த குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் கட்டடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் மிகவும் சிதிலம் அடைந்து, மழைக்காலங்களில் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு மழைநீர் தேங்கி நிற்கும் நிலையில் உள்ளது. மேலும், கட்டடத்தின் மேற்கூரை மற்றும் சுற்றுச்சுவர்கள் மிகவும் சிதிலமடைந்து மேற்கூரை ஆனது ஆங்காங்கே பெயர்ந்து உதிர்ந்து விழுந்து கொண்டுள்ளது. இதனால் இங்கு பணி செய்யும் ஊழியர்களுக்கும் பராமரிக்கப்படும் குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளதால், தற்போது அருகில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழு கட்டடத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டு குழந்தைகள் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.

 

தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் பழுதடைந்துள்ள அரசு பள்ளி கட்டடங்களை முற்றிலும் இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டடம் கட்டும் பணியில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சிறு குழந்தைகள் பராமரிக்கப்படும் பாதுகாப்பு மையம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், அதை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டடம் கட்டவேண்டி, அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பல்வேறு மனுக்கள் அனுப்பியும், அதுகுறித்து எதுவும் கண்டுகொள்ளாமல் அரசு அதிகாரிகள் மௌனம் காத்து வருகின்றனர்.

 

cuddalore district keezhathanur anganwadi centre renovation request form village people 

 

இது தொடர்பாக கிராம மக்கள் பழைய கட்டடத்தை அப்புறப்படுத்தி விட்டு பாதுகாப்பான புதிய கட்டடத்தை விரைந்து கட்டி முடித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை பாதுகாப்புடன் பராமரிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இந்த குழந்தைகள் பராமரிப்பு மைய கட்டிடம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அமைச்சருமான சி.வி.கணேசன் அவர்களின் தொகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

சத்துமாவு கஞ்சியில் பல்லியா? 29 பேர் மயக்கம்... நெய்க்குப்பியில் பரபரப்பு! 

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

excitement in neikuppi Anganwadi!

 

விழுப்புரத்தில் அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட சத்துணவு கஞ்சியில் பல்லி விழுந்ததாக கூறப்படும் நிலையில், 13 குழந்தைகள் உட்பட 29 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த நெய்குப்பி என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் வளரும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்து மாவு கஞ்சி வழங்கப்படுவது வழக்கம். வழக்கம் போல் இன்றும் சத்துமாவு கஞ்சி வழங்கப்பட்டது. அதனை குடித்த 13 குழந்தைகள் உட்பட 29 பேருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக 29  பேரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் சார் ஆட்சியர் அமித் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் 29 பேரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். சத்துமாவுக்  கஞ்சியல் பல்லி விழுந்ததாக தகவல்கள் வெளியாகி அது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.