Advertisment

சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டர் நிறுத்திவைப்பு நீட்டிப்பு... உயர்நீதிமன்றம் உத்தரவு

highcourt

சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டர் மீதான நடவடிக்கைகளை நிறுத்திவைக்க பிறப்பித்த உத்தரவை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

2017-18 ஆண்டுக்கு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் ஒரு நாளுக்கு 48 லட்சம் முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்புதல் புள்ளிகளை கோரி தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதில் மாநிலத்தில் உள்ள சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக வெளி மாநில கோழி பண்ணைகள் பங்குபெறுவதை தடை செய்தும், தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து மண்டல வாரியாக ஒப்பந்த புள்ளிகள் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்காரணமாக தனியார் கோழி பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி டெண்டருக்கு தடை விதித்து வெளி மாநில கோழி பண்ணைகளையும் அனுமதிக்கக்கோரி கரூரை சேர்ந்த வாசுகி கோழி பண்ணை உள்ளிட்ட 4 பண்ணைகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். மகாதேவன் செப் 20-ம் தேதி வரை டெண்டர் தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்திவைக்க உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் அரசுத்தரப்பின் பதில் மனுவுக்கு பதிலளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.இதனையடுத்து வழக்கு விசாரணையை செப் 25ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, டெண்டரின் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவை நீட்டித்தும் உத்தரவிட்டார்.

highcourt Tamilnadu eggs
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe