Advertisment

நீட் கொடூரம் - மேலும் ஒருவர் பலி!

kannan

நீட் கொடூரத்திற்கு மேலும் ஒரு தந்தை உயிரிழந்துள்ளார்.

மதுரை பசுமலையில் நீட் தேர்வு எழுதிய மகள் ஐஸ்வர்யாவை வீட்டிற்கு அழைத்துச்செல்லும் வழியில் தந்தை கண்ணன்(வயது 49)நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.

Advertisment

நெஞ்சுவலியால் துடித்த கண்ணன், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். உயிரிழந்த கண்ணன், சிவகங்கை சிங்கம்புணரி வடக்குத்தெருவைச் சேர்ந்தவர்.

Advertisment

உயிரிழந்த கண்ணனின் உடலை உறவினர்கள் சிங்கம்புணரி எடுத்துச்சென்றனர்.

நீட் தேர்வு எழுதுவதற்காக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடியைச்சேர்ந்த கிருஷ்ணசாமி, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை தேர்வுக்கு அனுப்பிவிட்ட பின்னர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சோகம் மறைவதற்குள் மகளை வீட்டிற்கு அழைத்துச்செல்லும் வழியில் தந்தை உயிரிழந்துள்ளார்.

neet kannan madurai heart father
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe