
திருவள்ளூரில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில்செண்பகா எனும் தனியார் நர்சிங் கல்லூரி மற்றும் விடுதி இயங்கி வருகிற நிலையில், அந்த கல்லூரி மாணவி ஒருவர் மதிய அளவில் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.இதுகுறித்து தகவலறிந்துசம்பவ இடத்திற்கு சென்றதிருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். எந்த காரணத்திற்காக மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தற்போது வரை தெரியவில்லை.
அந்த மாணவி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவரது அறையில் இருந்த அவருடைய செல்போன் மற்றும் அவரது உடைமைகளை போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். அண்மையில் திருவள்ளூரில் பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் மீண்டும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us