அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் பிரம்ம பவுண்டேஷன் சார்பில் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி இயங்கிவருகிறது. இதன் நிர்வாகி முத்துக்குமார். இவரது, மேற்பார்வையில் நர்சிங் கல்லூரி மாணவிகள் நேற்று தண்ணீர் தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடினர். அப்போது நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டும். கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தண்ணீரை விரயம் ஆக்கக்கூடாது. வனங்களை உருவாக்குவதன் மூலம் மழையை பெற முடியும், மரம் காப்போம், மழை பெறுவோம் என பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.நிறைவாக ஒரு சொட்டு தண்ணீர் துளி எந்த வடிவத்தில் கீழே விழுமோ, அதே வடிவத்தில் மாணவிகள் அனைவரும் சுற்றி நின்று தண்ணீரின் பெருமையை விளக்கும் வகையில் செய்து காட்டினர். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.