/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nurshin43434.jpg)
அரியலூர் மாவட்டம், செந்துறை நக்கம்பாடி நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகள் 19 வயதான தனுசியா. இவர் கல்லகம் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் கல்வி பயின்று வருகிறார். இந்நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக, மாணவியை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி தனுசியா திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி முதுவத்தூர் ரயில்வே கேட் அருகே இன்று (20/12/2021) காலை சென்னையிலிருந்து திருச்சி சென்ற தேஜஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)