Advertisment

பணி நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்! (படங்கள்)

Advertisment

கரோனா இரண்டாம் அலை பரவல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கரோனா தடுப்புப் பணிக்காக 2,000 மருத்துவர்கள், 6,000 செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதுபோலவே மருத்துவத்துறை சார்பிலும், மாவட்ட அளவிலும் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்டனர்.

முதல், இரண்டாம் அலை சமயத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) மூலம் செவிலியர்கள் சேர்க்கப்பட்டனர். தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்ததை அடுத்து தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

nurses struggle
இதையும் படியுங்கள்
Subscribe