Skip to main content

செவிலியர்கள் கோட்டையை நோக்கி பேரணி (படங்கள்)

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

பல்வேறு செவிலியர்கள் கூட்டமைப்பு மற்றும் சங்கங்கள் இணைந்து நடத்திய ‘கோட்டை நோக்கி பேரணி’ என்ற பெயரில் ஏராளமான செவிலியர்கள், பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து பேரணி சென்றனர். "அரசாணை எண் 1412ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு நிரந்தரத் தன்மை கொண்ட ஒப்பந்தப் பணி வழங்க வேண்டும்" என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்தப் பேரணியில் தேமுதிக கட்சியின் மாநிலப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” - விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து பிரேமலதா விஜயகாந்த்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Premalatha Vijayakanth on Vijayakanth's health No one should believe rumours” -

 

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

 

விஜயகாந்த் உடல்நிலை குறித்து கடந்த 29 ஆம் தேதி மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல் சீராக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசியல் களமும் பரபரப்படைந்தது. அவரது ரசிகர்களும் தேமுதிக கட்சித் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் பூரண குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனிடையே வீடியோ வெளியிட்ட பிரேமலதா, விஜயகாந்த்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் நலமுடன் வீடு திரும்புவார் எனவும் பேசியிருந்தார்.

 

இந்த நிலையில், விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் அதனால் யாரும் வதந்திகளை நம்பவேண்டாம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்புவார். நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், அதனை நம்பவும் வேண்டாம்” என்று கூறியுள்ளார். 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பிரசவம் பார்க்க ரூ.5 ஆயிரம் லஞ்சம்? - செவிலியர் பணியிடை நீக்கம்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

nn

 

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மணமேல்குடி அரசு மருத்துவமனையில், அதேபகுதியைச் சேர்ந்த சரவணன் தனது மனைவி சிந்துவுக்கு பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருந்த நிலையில், பிரசவம் பார்க்க செவிலியர் அமுதா ரூ.5 ஆயிரம் கேட்டு சிந்துவின் உறவினர்களுடன் தகராறு செய்ததாக வெளியான வீடியோ வைரலாக பரவியது. 

 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், இந்த புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். இந்நிலையில், இன்று திங்கள் கிழமை பிரசவம் பார்க்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து செவிலியர் அமுதாவை பணியிடை நீக்கம் செய்வதாக புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஸ்ரீபிரியா தேன்மொழி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்