Advertisment

கடல் கடந்தும், காலம் கடந்தும்... வாழ்பவர்... செவிலியர்களுக்கு மலர் தூவி மரியாதை

அன்பு, கருணை, சேவை இவை அனைத்தையும் கொண்ட மனித கடவுளாக இப்பூமியில் தோன்றியவர்தான் இத்தாலியைசேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல். உலகத்தில் உள்ள அனைத்து செவிலியர்களுக்கும் அன்னை என்று போற்றப்படுபவர். 18ம் நூற்றாண்டில் மருத்துவ வளர்ச்சி என்பது சொல்லும்படி இல்லை. அந்த காலகட்டத்தில் மருத்துவத்தில் செவிலியராக பணிபுரிவதில் பெருமையுடன் அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

Advertisment

1853 முதல் 1956 வரை ரஷ்யா உட்பட சில நாடுகளில் போர் நடந்தது. அப்படி நடந்த போரில் பல வீரர்கள் காயமுற்றனர். அவர்களுக்கு அரசுகளின் எதிப்பையும் மீறி மருத்துவ உதவி செய்ய போர்களத்தில் தன்னுடன் 36 செவிலியர்களோடு இறங்கினார். காயமுற்று கிடக்கும் வீரர்களை இரவு நேரத்திலும் லாந்தர் விளக்கை கையில் ஏந்தி அவர்களை கண்டுபிடித்து மருத்துவ சேவையாற்றினார். அதில் ஏராளமான வீரர்கள் உயிர் பிழைத்தனர். முதன்முதலாக நர்சிங் கல்லூரி ஏற்படுத்தினார்.

Advertisment

வாழ்நாள் முழுக்க திருமணம் செய்து கொள்ளாமல் செவிலியர் பணியை காதலித்து வாழ்ந்தார். அப்படிப்பட்ட செவிலியர்களின் அன்னையான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 1820 ம் ஆண்டு மே - 12ந் தேதி பிறந்த அவருக்கு இன்று 200வது பிறந்த நாள். இந்த நாளை உலகம் முழுக்க உள்ள செவிலியர்கள் கொண்டாடியுள்ளார்கள்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்கள் கேக் வெட்டியும், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், செவிலியர்களாக பணி செய்து வாழ்வதில் பெருமை கொள்கிறோம், எங்கள் அன்னை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் புகழை என்றென்றும் காப்போம் என உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

மக்கள் ராஜன் என்பவரது தலைமையிலான உணர்வுகள் அமைப்பை சேர்ந்தவர்கள் செவிலியர்கள் மீது பூக்களை தூவி மரியாதை செலுத்தினார்கள்.கடவுளுக்கு நிகராக கருத்தப்படும் மருத்துவத்துறையில் உயிர்நாடியாக வாழும் செவிலியர்களால்தான் உலகையே மிரட்டும் கொடிய கரோனாவை விரட்டும் போர் வீரர்களாக களத்தில் இருந்து பாடுபடுகிறார்கள்.

தன்னலமற்ற சேவையால், அர்பணிப்போடு வாழ்ந்த செவிலியர்களின் அன்னை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் கடல்கள் கடந்தும், காலம் கடந்தும் மனித சமூகத்தில் வாழ்ந்து வருகிறார்.

Government Hospital Erode nurses
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe