செவிலியர் தினம்; அமைச்சருக்கு கேக் ஊட்டி கொண்டாட்டம்! (படங்கள்)

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்து அறநிலைத் துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதில், செவிலியர் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது. மேலும், கேக் வெட்டி செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் செவிலியர் ஒருவர் அமைச்சர்களுக்கு கேக் ஊட்டி தங்கள் மகிழ்ச்சியைத்தெரிவித்தனர்.இந்த விழாவில், மருத்துவமனை வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறப்பாக செயல்பட்ட தீயணைப்புத் துறையினர், மருத்துவத் துறையினர் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Ma Subramanian minister sekar babu nurse day
இதையும் படியுங்கள்
Subscribe