Advertisment

தண்ணீரில் விழுந்த செவிலியர் கார்! மீட்ட ஊர் மக்கள்! 

The nurse's car fell into the water! Rescued people!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேலகுட்டப்பட்டியில் கட்டளை மேட்டு வாய்க்கால் கரையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தண்ணீருக்குள் பாய்ந்தது. அதனை அறிந்த ஊர் பொதுமக்கள் கயிறு கட்டி காரை மீட்டனர்.

Advertisment

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் வைகைநல்லூர் பஞ்சாயத்து, மேலகுட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மருதுஎன்பவரது மகள் நிர்மலா. இவர், பெங்களூரில் செவிலியர் வேலை செய்து வருகிறார்.

Advertisment

நிர்மலா தனது காரில் நேற்று தனது சொந்த கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்படி அவர் வரும்போது, கட்டளை மேட்டு வாய்க்கால் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து கட்டளை மேட்டு வாய்க்காலில் பாய்ந்தது. காரை ஒட்டிச் சென்ற நிர்மலா அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினார். இந்த சம்பவம் அறிந்ததும் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி கயிறு கட்டி காரை கரைக்கு கொண்டு வந்தனர்.

car karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe