
கருக்கலைப்பில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற செவிலியரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே செல்லக்குப்பத்தில் கருக்கலைப்பு செய்த ஓய்வுபெற்ற செவிலியரானராஜாமணி கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சையில் பதுங்கியிருந்த ராஜாமணியை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், அவர் தற்போது கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முனியாண்டி என்ற முதியவர் அவரது பேத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்ததால், சிறுமி கர்ப்பம் ஆனார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள ஏரி பகுதியில் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமிக்குச் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து, குழந்தை அகற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்துபோலீசார் விசாரணை நடத்திவந்தனர். இந்தப் புகாரில் சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா முனியாண்டி போக்சோவில் கைது செய்யப்பட்ட நிலையில், கர்ப்பமான சிறுமிக்குக் கருக்கலைப்பு செய்த புகாரில் ஓய்வுபெற்ற செவிலியர் ராஜாமணியை போலீசார்தேடிவந்தனர். இந்நிலையில், தனிப்படை போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
Follow Us