/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cop_92.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ளகிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் முனியாண்டி. இவர், தனது பாதுகாப்பில் வளர்ந்து வந்த தனது 15 வயது பேத்தியை அவ்வப்போது பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதன் காரணமாக அந்தச் சிறுமி 9 மாத கருவுற்றுள்ளார்.
இதையறிந்த முனியாண்டி, சிறுமியின் கருவைக் கலைப்பது சம்பந்தமாக அதே பகுதியைச் சேர்ந்த இந்திராணி (65) என்பவரிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அப்போது அவர், அதேபகுதியில் உள்ள ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணியைப் பற்றி தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இந்திராணி உதவியுடன் முதியவர் முனியாண்டி, தனது பேத்தியை செவிலியர் ராஜாமணியிடம் அழைத்துச் சென்று உள்ளார். செவிலியர் ராஜாமணி, அச்சிறுமிக்குச் சிகிச்சை அளித்துள்ளார். அதனடிப்படையில் சிறுமிக்கு குழந்தை ஒன்று பிறந்து இறந்துள்ளது. அந்த சிசுவை அப்பகுதியில் உள்ள ஆற்றுத் தண்ணீரில் வீசியுள்ளனர். இந்தத் தகவல் வெளியாகி இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசார், அம்மூவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், செவிலியர் ராஜாமணி மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்காக மகளிர் காவல் நிலையத்தில் இருந்த சில பெண் காவலர்கள் செவிலியர் ராஜாமணிக்கு வேண்டியவர்களிடம் லஞ்சமாகப் பணம் கேட்டு பேரம் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த சிலரை பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி, சிறுமியின் கருவை குறைப் பிரசவத்தில் சிதைப்பதற்கு அழைத்துச் சென்ற அவரது தாத்தா முனியாண்டி, அவருக்கு உதவியாகச் சென்ற இந்திராணி ஆகியோர் மீதுவழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். கருக்கலைப்புக்கு காரணமாக இருந்த ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணி தலைமறைவாக இருந்துள்ளார். அவரையும் போலீசார் நேற்று கைதுசெய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)