வேலூர் மாவட்டம் ஆம்பூர் நூருல்லாபேட்டை பகுதில் வசித்து வருபவர் அப்துல் ஆரிஃப். கடந்த ஒரு வருடமாக இவரது தாயார் உடல் நலம் குறைவால் வீட்டில் வைத்து சிகிச்சை அளித்துவருகிறார். அவரை கவனித்துக்கொள்ள மருத்துவ செவிலியர் வேண்டும் என்று பலரிடம் கூறி வந்ததுள்ளார், முகநூலில் பதிவும் போட்டுள்ளார். இதை தெரிந்துக்கொண்டு வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்த ஹாபிதா என்பவர், சில தினங்களுக்கு முன்னர் அப்துல் ஆரிப்பை செல்போனில் தொடர்பு கொண்டு செவிலியர் ஒருவர் இருப்பதாகவும், நேரில் வந்து விவரங்களை வாங்கிக்கொண்டு அழைத்து செல்லுமாறு பேசி உள்ளார்.

Advertisment

nurse

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதனை நம்பி அவர் கடந்த சனிக்கிழமை மார்ச் 16ந்தேதி, பெங்களூரிலிருந்து ரயிலில் ஆம்பூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த பெண் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு செவிலியரை அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். இதனை கேட்டு அவர் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி அந்த பெண்ணை தொடர்பு கொண்டு ஆட்டோ மூலம் அந்த பெண் சொன்ன முகவரிக்கு சென்றுள்ளார். அங்கிருந்த அந்த பெண் அவரை வீட்டிற்க்குள் அழைத்து சென்றவர், ஒரு அறையில் அவரை அமர வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த அறைக்குள் 8 பேர் கொண்ட கும்பல் நுழைந்து கத்தி மற்றும் ஆயுதங்களை காண்பித்து அவருடைய ஆடைகள் கழுற்றி அரை நிர்வாணமாக்கி பக்கத்தில் ஒரு பெண்ணை நிறுத்தி செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த படங்களை அவரிடம் காட்டி, எங்களுக்கு பணம் வேணும், நாங்க கேட்கற பணம் கொடுக்காவிட்டால் சமுக வலைதளங்களில் படங்களை வெளியிடுவதாக மிரட்டி உள்ளனர்.

Advertisment

nurse

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அப்போது அவர் உயிருக்கு பயந்து தன்னிடம் இருந்த 4 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். மேலும் அவர் வைத்திருந்த 5 வங்கிகளின் ஏ.டி.எம் கார்டுகளை பறித்து அதன் ரகசிய எண்னை மிரட்டி வங்கிய பின்னர் அவரை அறையில் பூட்டி வைத்துவிட்டு, அந்த அந்த ஏ.டி.எம் கார்டுகளை எடுத்து சென்ற அந்த கும்பல் வாணியம்பாடி சி.எல் சாலையில் உள்ள ஒரு நகை கடையில் ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தி ரூ.2 லட்ச்சத்துக்கான நகைகளை வங்கியுள்ளனர். மேலும் பல்வேறு வங்கி ஏ.டி.எம் கார்டுகளை ஸ்வைப் செய்து 1 லட்சத்துக்கான நகையை வாங்கியுள்ளனர். அதன்பின் வீட்டுக்கு வந்து அறையில் பூட்டி இருந்த தொழில் அதிபரை இரவு 10 மணிக்கு கும்பலின் ஒருவர் ஆட்டோ மூலம் பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது காதர்பேட்டை என்ற இடத்தில் ஆட்டோ வந்த பொது தொழிலதிபர் கூச்சலிட்டுள்ளார். இதனை கேட்ட பகுதி மக்கள் ஆட்டோவை நிறுத்தினர், அப்போது அதல் இருந்த நபர் ஓட முயன்ற பொது பொதுமக்கள் அவரை பிடித்தனர்.

Advertisment

nurse

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

கத்தி கூச்சல் போட்ட தொழில் அதிபரிடம் பொதுமக்கள் விசாரித்தபோது, நடந்த விபரத்தை கூறி தன்னை கடத்தி பணம் பறித்ததாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பிடிப்பட்ட நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொழில் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையிலான போலீசார் பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விபரம் தெரிந்து அந்த கும்பல் தலைமறைவானது. தனிப்படை அமைத்து அவர்களையும், அந்த பெண்ணையும் தேடினர். தலைமறைவாக இருந்த இரண்டு பெண்கள் உட்பட 10 பேரை பெங்களுரூ, வாணியம்பாடியில் கைது செய்தனர். ஆபிதா, தாரா, ஷைலாபுதின், நதீம், கோவிந்தராஜ், மனோஜ், அசேன், சதாம்உசேன், இப்ராஹிம், அஸ்லம் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6.5 சவரன் தங்க நகைகள், 70 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். கைது செயப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

nurse

அவர்களை கஸ்டடியில்எடுத்து விசாரணை செய்தால் இதுப்போல் இந்த கும்பல் இன்னும் எவ்வளவு பேரை ஏமாற்றியுள்ளது என்பது தெரியவரும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.