st

திமுக மாநில மகளிரணி புரவலர் நூர்ஜகான் பேகம் திடீரென உடல் நலக்குறைவால் திண்டுக்கல்லில் இறந்தார்.அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திராவிட முன்னேற்றக் கழகம் தலைவர் மு. க. ஸ்டாலின் திண்டுக்கல் வந்து நூர்ஜகான் பேகத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி

உடன் இருந்த நூர்ஜகான் பேகம் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

அதன் பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தலைவர் மு. க. ஸ்டாலின், ‘’ நூர்ஜகான் பேகம் திராவிட முன்னேற்ற கழகத்தின் மகளிர் அணியில் ஒரு அங்கமாக விளங்கியவர். அதுபோல் நூர்ஜஹான் பேகம் ஒரு இஸ்லாமிய பெண்ணாக இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு வந்தவர். அவர் பேசாத மேடைகளே கிடையாது.

Advertisment

sd

அந்த அளவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சாரத்தில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இறுதி மூச்சு வரை தன்னை இணைத்துக்கொண்டவர் நூர்ஜஹான் பேகம். அவர் சாதாரண வட்டச் செயலாளராக இருந்தும், வார்டு உறுப்பினராக இருந்தும் பொதுமக்களுக்கு சேவையாற்றியுள்ளார் . அப்பேர்பட்டவரின் இழப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், மகளிர் அணிக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடிக் கொண்டிருக்கின்றனர். அவரது குடும்பத்தாருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

Advertisment

உடன் முன்னாள் அமைச்சர் ஐ.பி. மற்றும் மாவட்ட செயலாளர்கள் சக்கரபாணி, ஐ.செந்தில்குமார் உள்பட மாநில அளவில் உள்ள பெரும்பாலான பொறுப்பாளர்கள் பெரும் திரளாக வந்து நூர்ஜகான் பேகத்திற்கு அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர்.