Advertisment

"விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! 

publive-image

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (23/05/2022) காலை 10.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தைத் தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூபாய் 227 கோடி திட்ட மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திட்டத்தில் விவசாயிகளுக்கு பண்ணை குட்டை அமைக்கதென்னங்கன்று, காய்கறி, பழச்செடிகள் வழங்கப்பட்டன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் 9 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக உழைத்தவர் கலைஞர். காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து வைக்கிறேன். வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து விவசாயிகளை அரசு பெருமைப்படுத்துகிறது. விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. உழவர்களின் நலன்களை எப்போதும் பாதுகாக்கும் அரசாக தி.மு.க. அரசு திகழ்கிறது. கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் அதிக பயிர்க்கடன்கள் வழங்கப்படும். கிராமங்கள் தன்னிறைவு பெறும்; நகரங்களை நோக்கி நகர்வது தடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., மற்றும் துறைச் சார்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tamilnadu Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe