Thousands affected by the 7th day in Tamil Nadu ...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து இருக்கிறது.தமிழகத்தில் ஏழாவதுநாளாகஒரே நாளில்கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இதுவரை 30,152 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் 13,503 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 1,146 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையிலும் அதேபோல் நான்காவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் சென்னையில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20,993ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்ததால் கரோனாவால் இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் ஏழாவது முறையாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொடர்ந்து பதிவாகியுள்ளது. இன்று15 ஆயிரத்து 309 பரிசோதனைகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதேபோல் தமிழகத்தில் சிகிச்சை பெற்றவர்களில் 16,395 பேர்இதுவரை குணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 633 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertisment