The number one storm warning cage boom in Ennore

சென்னை அடுத்தஎண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Advertisment

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதைத்தொடர்ந்து புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்புயல் எச்சரிக்கையை அறிவுறுத்தும் வகையில் எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண்புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை எண்ணூர் மட்டுமல்லாது கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது எண்ணூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.