Skip to main content

“ஊரடங்கு காலத்திலும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்த மாதிரி தெரியவில்லை” - மாவட்ட நிர்வாகம்

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

The number of corona patients does not seem to be low even during the curfew - District Administration

 

தமிழகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அதனைக் கட்டுப்படுத்த, பரவல் சங்கிலியை உடைக்க ஊரடங்கை அறிவித்ததோடு, பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்துவருகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இரண்டு வாரத்தைக் கடந்த நிலையில் இன்னும் தொற்று எண்ணிக்கை தமிழகத்தில் குறையவில்லை. 

 

சில மாவட்டங்களில் எண்ணிக்கை குறைந்தாலும், பல மாவட்டங்களில் அதிகரித்தேவருகின்றன. சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம் போன்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கையும் மரணிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தேவருகின்றன. கடந்த மே 21ஆம் தேதி 726 பேரும், மே 22 ஆம் தேதி 757 பேரும், மே 23ஆம் தேதி 1,006 பேரும், மே 24ஆம் தேதி 1,120 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 

இப்படி கடந்த இரண்டு வாரமாக உயர்ந்துகொண்டேவருகின்றன. தொற்றாளர்களின் எண்ணிக்கை எந்த நாளும் குறையவில்லை. மே 24ஆம் தேதி நிலவரப்படி 6,842 பேர் சிகிச்சையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறுகிறது. இதுவரை 383 பேர் இறந்துள்ளனர் எனக் கூறுகிறது. முற்றிலும் விவசாயத்தை நம்பியுள்ள, கிராமங்கள் நிறைந்த மாவட்டங்களிலும் தொற்று பரவியுள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். தினசரி பரிசோதைனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையவேயில்லை என்கிறார்கள்.

 

கரோனா பரிசோதனை செய்துகொண்டு சிகிச்சை பெறுபவர்களைவிட, கரோனா அறிகுறி தெரிந்துகொண்டு பரிசோதனை செய்யாமல் மருத்துவர்களை நேரடியாக சந்தித்து மருத்துவம் பார்பவர்கள் இந்த மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். இதனால் கரோனா நோயாளிகளின் உண்மையான எண்ணிக்கை, இறப்புகளின் எண்ணிக்கை முழுமையாக தெரியவில்லை என்கிறார்கள். கிராம அளவில் கரோனா தடுப்புக் குழுவை அமைக்க வேண்டும். அவர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், திருமணம், இறப்பு போன்ற சடங்குகளில் பொதுமக்கள் அதிகளவில் கூட விடாமல் கிராமங்களில் தடுக்க வேண்டும், அதோடு கிராமங்களில் சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விமான நிலையத்தில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட பயணிகளால் திடீர் பரபரப்பு!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

Passengers diagnosed with corona infection on examine

 

திருச்சி துவாக்குடி அருகே உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கு ஏற்கனவே கரோனா நோய்த்தொற்று உறுதியானது. இதையடுத்து நேற்று கல்லூரியை சேர்ந்த சுமார் 135 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

பரிசோதனையில் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் திருச்சியை சேர்ந்த மருத்துவர் ஒருவரும், தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் திருச்சியிலிருந்து சார்ஜா விமானம் என்று காலை புறப்பட தயாராக இருந்தது.

 

அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் மருத்துவ சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது கடலூரை சேர்ந்த 43 வயது ஆண் பயணி மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த 45 வயது ஆண், பெண் இருவருக்கும் கரோனா தொற்று அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

 

Next Story

கூடுதல் தளர்வுகளா? கட்டுப்பாடுகளா? - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

Additional relaxations? Restrictions? - Chief Minister MK Stalin's advice!

 

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளை அளிக்கலாமா அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது ஆலோசனை நடத்திவருகிறார். 

 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, கரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள், கூடுதல் தளர்வுகளை அளிக்கலாமா அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்திவருகிறார். 

 

கூட்டத்திற்குப் பின்னர் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தில் கூடுதல் தளர்வுகளா அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளா என்பது குறித்து தமிழ்நாடு அரசு இன்று (06/08/2021) மாலை அல்லது நாளை காலை அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.