Advertisment

இடையூறு செய்யும் நாய்கள்; வலை வீசும் மாநகராட்சி ஊழியர்கள்

nuisance dogs; Corporation employees who throw nets

சென்னையில் ஃபார்முலா 4 பந்தயம் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு போட்டிகள் தொடங்கி நடைபெற்ற நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக போட்டி நடைபெற இருக்கிறது. நேற்று கார் பந்தய சாலையில் போட்டியின் போதுதிடீரென நாய் புகுந்து இடையூறு ஏற்படுத்தியதாக மாநகராட்சி ஊழியர்கள் நாய்களை பிடித்த அப்புறப்படுத்தினர். இந்நிலையில் இன்றும் போட்டிகள் நடைபெற இருப்பதால் கார் பந்தயம் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள தெருநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் வலை வீசி பிடித்து வருகின்றனர்.

Advertisment

nuisance dogs; Corporation employees who throw nets

இன்னும் சற்று நேரத்தில் இன்றைய கார் பந்தயத்தின் பயிற்சி சுற்று தொடங்க இருக்கிறது. இன்று பயிற்சி சுற்று மற்றும் தகுதி சுற்று ஆகியவை அடுத்தடுத்து நடைபெற உள்ளன. இதனால் நாய்களால் இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதியில் உள்ள நாய்களை வலைவீசி பிடித்து வருகின்றனர். பிடிக்கப்படும் நாய்கள் போட்டிகள் முடிந்ததும் அதே பகுதியில் மீண்டும் விடப்படும் என்றும்கூறப்பட்டுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment
Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe