ntk Seaman vs Varunkumar ips related news

ஐ.பி.எஸ். அதிகாரியான வருண் குமாருக்கும், நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகச் சீமான் மீது திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வருண் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேற்று (30.12.2024) வருண் குமார் ஆஜரானர்.

அப்போது நீதிபதியிடம் அவர் 30 நிமிடங்கள் வாக்குமூலம் அளித்திருந்தார். அதோடு சீமானின் அறிக்கை மற்றும் வீடியோ உள்ளிட்ட 9 ஆவணங்களை நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் சீமானைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் இது தொடர்பாகப் பேசுகையில், “அவ்வளவு பெரிய சீன் எல்லாம் அவர் இல்லை. அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? அவர். முதலில் நீ யார் என்று சொல். ஐ.பி.எஸ். அதிகாரியான வருண் குமாரிடம் எதற்காக நான் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

அவருக்குப் பயந்துகிட்டு நான் மன்னிப்புக் கேட்க வேண்டுமா?. வருண் குமார் நேருக்கு நேர் நின்று என்னுடன் பேசுவாரா?. நாகரிகம் கருதி சில அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களின் பெயர்களைக் கூற விரும்பவில்லை. அனைவரையும் அனுப்பி, எனக்கும் அவருக்கும் இடையே பிரச்சினை வேண்டாம். அதை முடித்துவைக்கும்படி அனுப்பி வைத்தவர் வருண் குமார். நான் எதற்காகப் பேச வேண்டும் என்று கூறிவிடு அங்கிருந்து எழுந்து சென்றேன்.

Advertisment

துப்பாக்கி, பட்டாலியன் எல்லாம் வைத்துக் கொண்டு, வருண் குமார் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறுவது கேவலமாக இல்லை?. என்னிடம் மோதி தன்னை ஒரு ஆளாகக் காட்டிக்கொள்ள நினைக்கிறார். அவர் சரியான ஆண்மகன் என்றால் எனக்குத் தண்டனைப் பெற்றுக்கொடு. காக்கிச் சட்டைக்குள் மறைந்திருக்கும் குற்றவாளி அவர். அவர் செல்போன், ஆடியோ திருடன். நாம் தமிழர் கட்சியினரின் 14 செல்போன்களை திருடியவர் அவர். அதிலிருந்த ஆடியோக்களை வெளியிட்டது வருண் குமாரா? இல்லையா?. நேர்மையானவராக இருந்தால் பதில் கூறட்டும்.

ntk Seaman vs Varunkumar ips related news

தமிழக அரசு என்னோடு மோத இயலாமல், வருண் குமாரை நிறுத்தி ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. எதற்காக அவருக்கு டி.ஜி.பி.யாகபதவி உயர்வு. அதுவும், கணவன் மனைவி இருவருக்கும் ஹனிமூன் ட்ரிப் போல, திண்டுக்கல் திருச்சியில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அனைவருக்கும் பணியிட மாறுதல் வழங்கிய அரசு வருண் குமாரை மட்டும் அதே இடத்தில் பணியமர்த்தி உள்ளது. வருண் குமார் என்னை என்ன செய்துவிடுவார்?. எங்கள் கட்சியினரின் செல்போன்களை திருடிச் சென்று அதிலிருந்த ஆடியோவை தி.மு.க. ஐடி விங்குக்கு கொடுத்துவிட்டு, அங்குள்ள சில அல்லக்கைகளை வைத்துப் பேச வைத்து வருண் குமார்” என்று ஆவேசமாகக் கூறினார்.