Advertisment

மைக் செட்டுக்கு மல்லுக்கட்டிய நாம் தமிழர் கட்சியினர்.. போலீசாருடன் வாக்குவாதம் பரபரப்பு!

NTK Party members nilakottai petrol price hike

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர், மோட்டார் சைக்கிள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றிற்கு மாலை போட்டு பாடை கட்டி கொண்டு வந்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர், மைக் செட் ஒலி பெருக்கியை பயன்படுத்தினர். இதற்கு அனுமதி மறுத்த போலீசார், ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தினர்.

இதனால் நாம் தமிழர் கட்சியினருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்திற்கு மேல், வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்த போதிலும் நாம் தமிழர் கட்சியினர் பிடிவாதமாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

nilakottai ntk
இதையும் படியுங்கள்
Subscribe