Advertisment

பிரபாகரன் பிறந்தநாளை குருதிக்கொடை கொடுத்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ntk members donated blood

Advertisment

நவம்பர் 26 விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பிறந்தநாளை தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த காலங்களில் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது மாறி தற்போது சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.பிறந்தநாளை இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது மட்டுமின்றி ஏழைகளுக்கு உதவிகள் செய்தும் வருகின்றனர். இதே போல தமிழ்நாட்டிலும் பல்வேறு அமைப்பினரும் தமிழீழ ஆதரவாளர்களும் கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில்,புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மருத்துவமனையோடு இணைந்து நாம் தமிழர் கட்சியினர் இரத்த தானம் செய்து கடைவீதியில் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள். ரத்த தானம் செய்த இளைஞர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

ntk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe