ntk demontration in thiruvarur

Advertisment

கரோனா கால இக்கட்டான சூழ்நிலையில் தனியார் பள்ளிகளின்முழுமையான கல்விக் கட்டணவசூலை அரசே முன்வந்து தடுத்து நிறுத்த வேண்டும் என மன்னார்குடியில் நாம்தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கரோனா வைரஸின் கோரப்பிடியால் பொதுமக்கள் சொல்லமுடியாத இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். நடுநிலை மற்றும் கடைகோடி மக்களின் நிலமையோ படுபாதாளத்தில் இருக்கிறது. வணிகர்களும், சுயஉதவி குழுவைச் சேர்ந்த பெண்களும் விவசாய பொதுமக்களும் தாங்கள் வாங்கிய கடனைக் கட்டமுடியாமல் திணறி வருகின்றனர். வங்கிகளும், சுயநிதி நிறுவனங்களும் கந்துவட்டிக்காரனை போல வசூல் செய்துவருகின்றன.

Advertisment

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பொியார் சிலை முன்பு, நாம் தமிழர் கட்சியினர் மத்திய, மாநில அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களைஎழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களிடம் கந்துவட்டிக்காரர்களைப் போல வசூலித்துவரும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் அடாவடியை மத்திய, மாநில அரசுகள் தடுக்கக் கோாியும், தனியார் பள்ளிகளில் முழுமையாகக் கல்வி கட்டணம் வசூலிப்பதை தடுக்கக் கோாியும், பிரதம மந்திாி வீடுகட்டும் திட்டம் மற்றும் விவசாயிகளுக்கான நிதி உதவித் திட்டத்தில் நடைபெற்ற ஊழலைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.