Skip to main content

நாதக அலுவலகத்தில் நுழைந்த ஆதித்தமிழர் பேரவையினர்; அடிதடியில் முடிந்த போராட்டம்

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

NTK are a conflict between Adi Tamizhar organization

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிந்திருந்தாலும் அங்கு நடைபெற்ற பிரச்சாரத்தின் சூடு தற்போது வரை குறையாமல் இருந்து வருகிறது. நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து அனைத்துக் கட்சியினரும் பரப்புரை மேற்கொண்டனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட சீமான், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வந்தேறி எனப் பேசியிருந்தார். இதற்கு அப்போதே எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன. மேலும், பல அரசியல் கட்சிகளும் சீமானின் இந்தப் பேச்சை கண்டித்து போராட்டங்களையும் நடத்தினர்.

 

இந்த நிலையில், குறிப்பிட்ட சமூகத்தை வந்தேறி எனக் கூறிய சீமானைக் கண்டித்து மார்ச் 6 ஆம் தேதி நாம் தமிழர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என ஆதித்தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் கு.ஜக்கையன் அறிவித்திருந்தார். அந்த வகையில், இன்று போரூர் சாலையில் ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டத்தைத் தொடங்கினர். அப்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போராட்டக்காரர்களை தடுத்து ஒரே இடத்தில் போராட்டத்தை நடத்தும்படி கூறிய நிலையில், ஆதித்தமிழர் பேரவையினர் வேறுவழியாக நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் நுழையவே, அலுவலகத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆதித்தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களை நாம் தமிழர் கட்சியினர் அடித்து விரட்டினர்.

 

இதனைத் தொடர்ந்து இருதரப்பினரையும் கைது செய்த போலீசார் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஏற்கனவே ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில், தற்போது இந்தப் பிரச்சனையால் அந்த சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அண்ணனை கொலை செய்த தம்பி; உடந்தையாக இருந்த தாயும் கைது

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
The brother who attack his brother; The accomplice mother was also arrested

குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை தம்பி கொலை செய்ததும், அதற்கு உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பீமநகர் சேர்ந்தவர் பர்வீன் பானு (வயது 48). இவருக்கு தமிமுன் அன்சாரி (வயது 33), சையது அபுதாஹிர் ( 29) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தமிமுன் அன்சாரி ஆட்டோ டிரைவராகவும், டீ மாஸ்டராகவும் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 5 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

குடி போதைக்கு அடிமையான தமிமுன் அன்சாரியின் நடவடிக்கை பிடிக்காததால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் தினமும் தமிமுன் அன்சாரி தனது தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். நேற்று இரவு தனது தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட தம்பி சையது அபுதாஹிர் வீட்டில் இருந்த  அரிவாளால் தமிமுன் அன்சாரியின் தலையில் வெட்டினார். இருப்பினும் ஆத்திரம் அடங்காமல் அவரது கழுத்தில் மின்வயரை சுற்றி இறுக்கினார். இதில் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே தமிமுன் அன்சாரி இறந்து விட்டார். விபரீதத்தை உணர்ந்த பர்வீன் பானு அதிகாலை 4 மணி அளவில் யாரும் அறியாத வகையில் சையது அபுதாகீருடன் சேர்ந்து தமிமுன் அன்சாரியின் உடலை அவரது ஆட்டோவிலேயே ஏற்றிக்கொண்டு கொள்ளிடம் ஆற்றில் நீரில் போட்டு விட்டு வர முடிவு செய்தார்.

அதன்படி கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் உடலை இறக்கும் போது இருசக்கர வாகனங்கள் வரவே உடலை அங்கேயே போட்டுவிட்டு ஆட்டோவில் தப்பி விட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.பாலத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவினை ஆய்வு செய்து ஆட்டோ நம்பரை கண்டுபிடித்தனர். பின்னர் ஆட்டோ உரிமையாளர் யார்?  மாநகர  சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் கொலையாளிகள் பர்வீன் பானு மற்றும் சையது அபுதாகிர் என உறுதி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து வீட்டில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ரவுடி என்கவுண்டர்; ஆயுதங்களை ஒப்படைத்த போலீசார்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024

 

Rowdy Encounter; Surrender of arms to court

 

தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் திருச்சி ரவுடி வண்ணாரப்பேட்டை துரை என்கிற துரைசாமி  என்கவுண்டர். கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் - வம்பன் இடையே தனியார் வேளாண் கல்லூரி எதிரே உள்ள வனத்துறைக்கு சொந்தமான தைலமரக்காட்டில் ரவுடி துரை என்கவுண்டர்  செய்யப்பட்டார்.

இது குறித்து ஆலங்குடி போலிசாரின் முதல் தகவல் அறிக்கையில்,  'திருவரங்குளம் - வம்பன் இடையே உள்ள தைலமரக்காட்டில் மர்ம நபர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையா தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது மறைந்திருந்த திருச்சி ரவுடி வண்ணாரப்பேட்டை துரை என்கிற துரைசாமி மற்றுமொரு நபர் போலீசாரை தாக்க முயன்ற போது போலீசார் சரணடையச் சொல்லியும் கேட்காமல் துரை நாட்டுத் துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டார். அரிவாளை காட்டி மிரட்டியதோடு பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை முயன்றார். ஆய்வாளர் முத்தையா தற்காப்பிற்காக சுட்டதால் ரவுடி துரை உயிரிழந்தார்.

உடனிருந்த நபர் தப்பி ஓடிவிட்டார்' என பதிவு செய்யப்பட்டிருந்தது. சம்பவ இடத்தை தொடர்ந்து போலீசார் பாதுகாத்து வரும் நிலையில் ரவுடி துரையிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிங்கிள் பேரல் துப்பாக்கி மற்றும் அரிவாளை ஆலங்குடி போலீசார் இன்று ஆலங்குடி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும் சம்பவ இடத்தை மனித உரிமை அமைப்பினர் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் பாதுகாப்பு தொடர்கிறது.