நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் அணி சார்பில் இன்று மதியம் சென்னை உயர்நீதிமன்ற ஆவின் பாலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்ஆந்திரமாநிலம், புத்தூர் சுங்கச் சாவடியில் தமிழ்நாடு சட்டக் கல்லூரி மாணவர்களை தாக்கியதை கண்டித்தும், இந்த சம்பவத்தால் தொடர்ந்து படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு தமிழக மற்றும் ஆந்திர அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தாக்குதலில் ஈடுபட்ட ரவுடிகளை உடனடியாக கைதுசெய்து சிறையில் அடைக்கவும் வலியுறுத்தினர்.