nr cong

Advertisment

புதுச்சேரி முத்தியால்பேட்டை சின்னையாபுரம் ஆர்.கே.தோட்டம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் நாகராஜன்(38) என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சார்ந்த இவர் நேற்று மாலை தனது பிள்ளைகளை டியூசனுக்கு கொண்டு போய் விடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

வீட்டில் இருந்து கொஞ்ச தூரம் சென்ற நிலையில் அவரை மர்ம நபர்கள் 4 பேர் வழி மறித்து சரமாரியாக தாக்கினார்கள். தாக்குதலில் தடுமாறி கீழே விழுந்த நாகராஜனை சுற்றி வளைத்து கத்தி, வீச்சரிவாள் ஆகிய ஆயுதங்களால் தாக்க முயன்றனர்.

அப்போது அவர்களிடம் இருந்து தப்பித்து தனது வீட்டை நோக்கி ஓடினார் நாகராஜன். கொலையாளிகள் விடாமல் விரட்டிச் சென்று வீட்டின் நுழைவு வாயில் அருகே வைத்து அவரை சரமாரியமாக வெட்டினர். இதில் நாகராஜன் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் விழுந்தார். அதன் பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

Advertisment

உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த நாகராஜனை உறவினர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதையடுத்து கொலை குற்றவாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி அஜந்தா தியேட்டர் அருகே உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் சமரசம் செய்ததால் மறியல் கைவிடப்பட்டது.

இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.