rajini politics

நடிகர் ரஜினிகாந்தின் 70- ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்துக்கு சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் ரஜினிகாந்த்'நவ் ஆர் நெவர்' (Now Or Never )என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கேக்கைவெட்டும், பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படத்தை அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தனது அரசியல் வருகையை அறிவித்தபொழுது 'மாற்றம் இப்போ இல்லனா எப்போவும் இல்ல' எனக் குறிப்பிட்டிருந்தார் ரஜினிகாந்த்.அதை வலியுறுத்தும் விதமாக இன்று அவர் வெட்டிய பிறந்தநாள் கேக்கில் 'நவ் ஆர் நெவர்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

Advertisment