'November 1st class for first year engineering students' - Anna University announcement!

Advertisment

அண்ணா பல்கலைக்கழகம் இன்று (20/10/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் நவம்பர் 1- ஆம் தேதி முதல் தொடங்கும். நவமபர் 15- ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெறும். இறுதியாண்டு மாணவர்கள் விடுதிகளைக் காலி செய்த பின் முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடைபெறும். அடுத்தாண்டு மார்ச் 7- ஆம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தொடங்கும்.

நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தின் பெரும் பகுதி தொழில்துறையின் பங்களிப்பு இடம் பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு திறன்களை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு பல்கலைக்கழக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.