Advertisment

November 13th is a public holiday

இந்த வருடம் தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி (12.11.2023) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையையும் ஏற்று தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 13 ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இது குறித்து தமிழக அரசால்வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இவ்வாண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு, தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள். கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.