/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mks3333_0.jpg)
தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் இன்று (19/11/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க.வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் நவம்பர் 21- ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)