Advertisment

தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் அறிவிப்பு

 Notification of relief for the boats of Tamil Nadu fishermen

Advertisment

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, “மீனவர் நலனில் அக்கறை கொண்டுள்ள இந்தஅரசு இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் விடுபட்டுப் போன 21 விசைப் படகு உரிமையாளர்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் வழங்கப்படும்.

அதேபோன்று 12 நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 33 படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 1 கோடியே 23 லட்ச ரூபாய்முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்துவழங்கி அரசாணை வெளியிடப்பட்டது” எனத்தெரிவித்துள்ளார்.

Boat fisherman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe