Notification of Helpline Number of Government Transport Corporations

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கும் உதவி மைய எண்அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இயக்கம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா உதவி மைய எண் ‘1800 599 1500’ என்ற 11 இலக்க எண் கடந்த 09.03.2023 அன்று போக்குவரத்துத் துறை அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டு தற்போது வரை உபயோகத்தில் இருந்து வருகிறது.

Advertisment

இந்த சூழலில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்த 11 இலக்க உதவி மைய எண்ணை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை என்று பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், நாளை முதல் (10.11.2023) முதல் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவாக கட்டணமில்லா மூன்று இலக்க உதவி மைய எண் (149) அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி மூன்று இலக்க புதிய உதவி மைய எண் 149 ஐ தொடர்பு கொண்டு, பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.