Advertisment

விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவிப்பு; முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

Notification of compensation to farmers says CM MK Stalin's order

காவிரி ஆற்றில், கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் பெறப்படாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிடத்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இது குறித்து வெளியிட்டுள்ள உத்தரவில், “தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாகத்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கடந்த ஜூன் 12 ஆம் தேதி (12.06.2023) மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் தொடர்ந்து பெறப்படாத காரணத்தால், மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்குப் போதிய அளவு தண்ணீர் திறந்து விட இயலாத நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வாடிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாகக் கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் இழப்பீடாக வழங்கிடத்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (05.10.2023) உத்தரவிட்டுள்ளார்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Farmers
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe