தமிழகத்தில் என்றும் இல்லாத அளவுக்கு இன்று 231 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒருவர் இறந்ததால் கரோனாவால்உயிரிழந்தோர் எண்ணிக்கை தமிழகத்தில் 29 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா சிகிச்சைக்குமுகாம் அமைக்கதேவை இருப்பதால் சென்னையில் உள்ள திருமண மண்டபங்களைஒப்படைக்குமாறு சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து மண்டபங்களும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையை சுற்றி உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைகரோனாமுகாம்கள் ஏற்பாடு செய்ய ஒப்படைக்குமாறு சுற்றறிக்கை விடப்பட்டிருந்தநிலையில் தற்போது திருமண மண்டபங்களுக்கும்நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.