Advertisment

மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு

Notice that you can apply for MBBS, BDS courses from September 22!

Advertisment

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை (22/09/2022) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் பதிவிற்கான இணையதள அறிவிப்பு வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றிற்கான விண்ணப்பப் பதிவு, ஆன்லைனில் வரும் வியாழக்கிழமை முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களைப் பதிவு செய்ய அடுத்த மாதம் 3- ஆம் தேதி கடைசி நாளாகும். www.tnhealth.tn.gov.in மற்றும்www.tnmedicalselection.org ஆகிய இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவத்துறை அறிவித்துள்ளது.

BDS MBBS
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe