Skip to main content

மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

Notice that you can apply for MBBS, BDS courses from September 22!

 

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை (22/09/2022) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

விண்ணப்பப் பதிவிற்கான இணையதள அறிவிப்பு வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றிற்கான விண்ணப்பப் பதிவு, ஆன்லைனில் வரும் வியாழக்கிழமை முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

விண்ணப்பங்களைப் பதிவு செய்ய அடுத்த மாதம் 3- ஆம் தேதி கடைசி நாளாகும். www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவத்துறை அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்’ - மருத்துவ மாணவியின் தற்கொலை கடிதம்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

A heartwarming letter from a student who lost her life in karnataka

 

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரக்ருதி ஷெட்டி (20). இவர் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும், இவர் அந்தக் கல்லூரியின் தங்கும் விடுதியில் தங்கியிருந்து மருத்துவம் படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (13-11-23) அதிகாலை 3 மணி அளவில் பிரக்ருதி ஷெட்டி தங்கும் விடுதியின் 6வது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

 

இதனைப் பார்த்த சக மாணவிகள் இந்த சம்பவம் குறித்து விடுதி வார்டனிடம் தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் பற்றி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரக்ருதி ஷெட்டியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மருத்துவ மாணவி பிரக்ருதி ஷெட்டி நேற்று அதிகாலை 3 மணி அளவில் தான் தங்கியிருந்த முதல் தளத்தின் அறையிலிருந்து தங்கும் விடுதியின் 6வது மாடிக்குச் சென்றுள்ளார். மேலும், அங்குள்ள தனது தோழியின் அறை முன்பு செல்போன், காலணியை கழற்றி விட்டுவிட்டு அங்கிருந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

 

இதையடுத்து, பிரக்ருதி ஷெட்டி தங்கியிருந்த அறையை போலீசார் சோதனையிட்டனர். அந்த சோதனையில், பிரக்ருதி ஷெட்டி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தான் கைப்பட ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்ததாக காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அந்தக் கடிதத்தை மீட்ட காவல்துறையினர் தற்கொலைக்கான காரணத்தை தெரிந்துகொண்டனர். 

 

பிரக்ருதி ஷெட்டி எழுதியிருந்த கடிதத்தில், ‘எனது உடல் மிகவும் பருமனாக உள்ளது. நான் எம்.பி.பி.எஸ் படிக்க விரும்பினேன். ஆனால், எனது உடல் பருமனாக இருந்ததால் பல பிரச்சனைகளை எதிர்கொண்டேன். உடல் பருமனான காரணத்தால் நான் அழகாக இல்லை. உடல் எடையை குறைக்க பயிற்சி மேற்கொண்ட போதும் அதுவும் பலனளிக்கவில்லை. மேலும், அடிக்கடி உடல்நலமும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

Next Story

“7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்வோரிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது” - மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

7.5 percent quota should not be charged to medical students

 

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்வோரிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 

 

தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டீன் கீழ் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்கள். 

 

இந்த நிலையில் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்வோரிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மருத்துவ கல்வி இயக்குநர் சாந்திமலர், சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேரும் வகையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மருத்துவ கல்லுாரிகளில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்பில் சேரும் மாணவர்களிடையே, கல்விக் கட்டணம், புத்தகம், உணவு, விடுதி உட்பட எவ்விதக் கட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது. 

 

இந்த ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவிகள், ‘புதுமை பெண் திட்டம்’ நிதியுதவி உட்பட அனைத்துவித கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் தகுதி உடையவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் சில இடர்பாடுகள் இருப்பதால், கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.