அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு நாளை (14.07.2025) தொடங்க உள்ளது. இந்நிலையில் 141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இக்கல்லூரிகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 45 நாட்களுக்குள் குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டும் எனவும் அந்த நோட்டீசில் எச்சரிக்கையாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

அதாவது கல்லூரிகளில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் பற்றாக்குறை, ஆய்வகம் மற்றும் நூலக வசதி தொடர்பான குறைபாடுகள் இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . எனவே 45 நாட்களுக்குள் இந்த குறைபாடுகள் அனைத்தும் சரி செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.