ADVERTISEMENT

ஆளுநர் உரைக்கு நன்றியும் வருத்தமும் - சட்டப்பேரவை செயலர் கடிதம் 

10:02 AM Jan 11, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

2023ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் ரவி உரையுடன் 09/01/2023 அன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. அப்போது, ஆளுநரின் தொடர் கருத்துக்கள் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சட்டமன்றத்தில் இருக்கும் திமுக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆளுநருக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்ததோடு, கண்டன கோஷங்களை எழுப்பி வந்தனர். ஆளுநர் படிக்கும்போது தமிழ்நாடு அரசின் உரையில் குறிப்பிடப்பட்டிருந்த திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட வரிகளை புறக்கணித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் பேச்சுகள் அவைக் குறிப்பில் இடம்பெறக்கூடாது எனத் தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால் கோபமடைந்த ஆளுநர், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். இத்தகைய சம்பவங்களால் தமிழக சட்டமன்றமே போராட்டக் களமாக காட்சியளித்தது.

இந்நிலையில், ஆளுநரின் பேரவை உரைக்கு வருத்தமும் நன்றியும் பதிவு செய்யக்கோரி அறிவிப்பு வரப்பெற்றுள்ளதாக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார். சில பகுதிகளை இணைத்தும், விடுத்தும் ஆளுநர் உரையாற்றியதற்கு பேரவை வருத்தத்தைப் பதிவு செய்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT