/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/350_30.jpg)
ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான 17 வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டது. உயிரிழந்தவர்கள் விளையாடிய ஆன்லைன் விளையாட்டு என்ன என்பது போன்றவற்றைக் கணக்கெடுத்து தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
முக்கியமாக ரம்மி, ரம்மி கல்ச்சர், ஜங்லி ரம்மி, ட்ரீம் 11, லூடோ, பப்ஜி என ஆறு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சூதாட்ட செயலிகள் எதன் அடிப்படையில் செயல்படுகிறது. செயலிகளை உபயோகிப்பவர்கள் விளையாட்டில் தோற்றதைத்தாண்டி பணம் இழந்ததற்கு வேறு காரணங்கள் இருக்கின்றனவா எனப் பல்வேறு விளக்கங்களைக் கேட்டுஅதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
விளையாட்டு நிறுவனங்களின் தலைமையகங்கள் இருக்கும் இடங்களுக்கு அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விளையாட்டு நிறுவனங்கள் கொடுக்கும் பதிலைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)