மணிரத்னம், விக்ரமிற்கு நோட்டீஸ்!

Notice to Mani Ratnam, Vikram!

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் மணிரத்னத்திற்கும், நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி ஆகியோருக்கு செல்வம் என்ற நபர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் வரலாற்று உண்மைகள் மறைப்பு இருப்பதாகக்கூறி செல்வம் என்பவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், படத்தை வெளியிடும் முன் படத்தை தங்களிடம் போட்டுக் காட்ட வேண்டும் என்றும் அந்த நோட்டீஸ் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

manirathnam
இதையும் படியுங்கள்
Subscribe