துக்ளக்ஆண்டு விழாவில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக குருமூர்த்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பிப்.16ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆடிட்டர் குருமூர்த்திக்குஅரசுதலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி குறித்த விண்ணப்பத்தின் விசாரணைக்காக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குருமூர்த்தியின் பேச்சு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வழக்கறிஞர் துரைசாமி என்பவர் விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.