Advertisment

“சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப முடியாது” - உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

“Notice cannot be sent to Speaker” – High Court is categorical

தேமுதிக தலைவர் விஜயகாந்த், சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோர் தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கு இன்றுமீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தரப்பு, “தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி சபாநாயகருக்கு உத்தரவிட அரசியலமைப்பு சட்டம் தடை விதிக்கவில்லை. இ - விதான் என்ற செயலி மூலம் நேரடியாக ஒளிபரப்பலாம். பல சட்டமன்றங்களும் அவ்வாறு ஒளிபரப்புகின்றன. ஆளும் கட்சி பேசும்போது நேரலை செய்யப்படுகிறது. எதிர்க்கட்சி உள்ளிட்டோர் பேசும்போது நேரலை துண்டிக்கப்படுகிறது” என வாதத்தை முன் வைத்தது.

Advertisment

இதனைப்பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், “சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்ப வேண்டுமென அரசியலமைப்பு சட்டத்தின்படி கட்டாயம் இல்லை. சட்டமன்ற நிகழ்வுகள் தொடர்பாக சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப முடியாது” என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வாதத்தை முன் வைக்க எஸ்.பி. வேலுமணி தரப்பு கால அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணையை ஜனவரி 23 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

speaker
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe