Published on 11/05/2021 | Edited on 11/05/2021

கரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட காவல் உதவி ஆய்வாளர்கள் 25 பேருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் திருச்சி சரக டிஐஜி அனி விஜயா சிறப்பு விருந்தினகராக பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது, "பெண்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான பயிற்சிகளை கற்க வேண்டும் என கூறினார். மேலும் அனைவரும் சத்துள்ள உணவு, பழங்கால உணவுகளை அனைவரும் எடுத்து கொள்ள வேண்டும் .
அதே போல் அனைவரும் நல்ல உணவுகளை சாப்பிட வேண்டும், சுத்தமான உடைகளை உடுத்த வேண்டும், நல்ல சிந்தனையுடன், நல்ல மனது, மற்றும் எண்ணங்களுடன் எப்பொழுதும் இருக்க வேண்டும். நம்முடையை பெரியோர்கள் சொன்ன மாதிரி அடிக்கடி கை, கால்களை, கழுவி ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டால் எதுவும் நம்மை பாதிக்காது என்பது தான் உண்மை" என கூறினார்.