/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tmb-3.jpg)
பொதுவாக பொது மக்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான இலவச மருத்துவம் சார்ந்த முகாம்களை தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மட்டுமே அவ்வப்போது நடத்திவருவது இயல்பு. ஆனால் நிதி சார்ந்த வங்கி ஒன்று பொது மக்களுக்கு இன்றியமையாத கண் தொடர்பான இலவச சிகிச்சை முகாமை நடத்தியது கவனிக்கத்தக்கது மட்டுமல்ல, பிற நிதி நிறுவன வங்கிகளுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கிறது.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தனது 100வது நிறுவனர் தினவிழாவை முன்னிட்டு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் பொது மக்களுக்கான இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது. முகாமிற்கு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நெல்லை மண்டல மேலாளர் கணேஷ்குமார், நெல்லை தலைமை மேலாளர் லிவின் தேவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tmb-2.jpg)
முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்று கண் பரிசோதனை செய்துகொண்டு மருந்து மற்றும் உபகரணங்களைப் பெற்று பயனடைந்தனர். முகாமின் ஏற்பாடுகளை சங்கரன்கோவில் கிளை மேலாளர் மற்றும் வங்கி ஊழியர்கள் சிறப்பாகச் செய்து பொது மக்களின் பாராட்டைப் பெற்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)