Advertisment

இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கப்படவில்லை- மீரா மிதுன் பேட்டி!  

பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16 பிரபலங்களில் ஒருவரான மீரா மிதுன்இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

இவர் பிக்பாஸில் கலந்துகொள்வதற்கு முன் மாடலிங் செய்துவந்த நிலையில் அவருக்கும்ஜோ மைக்கல் என்பவருக்கு ஏற்கனவே முட்டல் மோதல்கள்இருந்துவந்தது.இந்நிலையில் மீரா மிதுன் பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் இருந்து ஜூலை 27 ஆம் தேதி வெளியேற்றப்பட்டார். அதன்பின் பரபரப்பான ஆடியோக்கள், வீடியோக்கள் என வெளியிட்டு பல பிரச்சனைகளிலும், சர்ச்சைகளிலும் சிக்கியவர் மீரா மிதுன்.

 Not a single rupee has been given so far - Meera Mithun interview!

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி எந்த ஒரு தொகையும் இதுவரைகொடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் வாழமுடியாத அளவுக்கு எனக்கு பிரச்சனைகள் இருக்கிறது. தற்போது நான் மும்பையில் இருக்கிறேன். சட்டம் சரியாக உள்ள மாநிலத்தில் இருப்பது என்னை பாதுகாப்பாக உணர வைக்கிறது. ஒப்பந்தபடி ஒரு ரூபாய் கூட அந்த தொலைக்காட்சி நிறுவனம் கெடுக்கவில்லை. கேட்டால் சரியான பதிலும் இல்லை. தொகையை கொடுக்கவில்லை என்றால் பெரும் பிரச்சனையை சந்திக்க நேரிடும். நான் எதிர்காலத்தில் அரசியலுக்கும்வருவேன் ஆனால் எந்த கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் என இப்போது கூற விரும்பவில்லை. என்மீது இரண்டு எஃப்ஐஆர் உள்ளது. இரண்டுமே போலியானது. பணம் வாங்கிக்கொண்டு போலீசார் என்மீது வழக்குபதிவு செய்துள்ளனர் என்றார்.

Biggboss meera mithun
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe