ADVERTISEMENT

''தமிழகத்தில் ஒருவர் கூட இந்த மோசடிக்கு ஆளாகக் கூடாது'' - வீடியோ வெளியிட்ட டிஜிபி

04:57 PM May 25, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆன்லைன் மோசடி, பிட்காயின் மோசடி உள்ளிட்ட பொருளாதார குற்றப்பிரிவு மோசடிகள் குறித்து அவ்வப்போது தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் டெலிகிராம் குரூப்பில் இணைந்து ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் 25 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் என ஒரு கும்பல் ஒன்று மோசடி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசியுள்ள அவர், ''ஒரு லேட்டஸ்ட் மோசடி வந்து இருக்கு. அது என்னவென்றால் டெலிகிராம் மோசடி என்று சொல்லலாம். வாட்ஸாப்பில் உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும். இந்த மாதிரி நீங்கள் இந்த டெலிகிராம் குரூப்பில் சேர்ந்து முதலீடு செய்தால் உங்களுக்கு நிறைய பணம் வரும் என்று சொல்வார்கள். நீங்கள் அதில் என்னதான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள அந்த குரூப்பில் சேருவீர்கள்.

டெலிகிராமில் உங்களுடன் நிறைய பேர் உரையாடிக் கொண்டிருப்பார்கள். ஒருவர் சொல்வார், ‘நான் வருமானம் இல்லாமல் இருந்தேன். வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என இருந்தேன். ஆனால் ஒருத்தர் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும் என்று சொன்னார். நான் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். எனக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் தருகிறார்கள்’ என்று.

ஆனால், நீங்கள் நம்பி பணத்தை இன்வெஸ்ட் செய்தால் இறுதியில் ஏமாற்றி விடுவார்கள். அதன் பிறகு அந்த குரூப்பில் இருந்து உங்களை வெளியேற்றி விடுவார்கள். பிறகு நீங்கள் எங்கே சென்றாலும் உங்களுக்கு பணம் கிடைக்காது. இது ஒரு நவீன மோசடி. புதிதாக நடந்து வருகிறது. தமிழகத்திலிருந்து எந்த நபருமே டெலிகிராம் மோசடிக்கு ஆளாகக் கூடாது'' எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT