Skip to main content

ராட்சசி பட டீச்சரல்ல… நிஜ ராட்சசி டீச்சர்!

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

திருவண்ணாமலை அடுத்த துர்கை நம்மியந்தல் கிராமத்தில் அரசின் ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயில்கிறான் 8 வயதான ஜெயப்பிரகாஷ். இவனது அப்பா மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து வருகிறார். தாயார் பரிமளா. கடந்த ஜீலை 16ந்தேதி பள்ளிக்கு சென்ற ஜெயப்பிரகாஷ்சிடம், ஆசிரியர் உஷா, கூட்டல் கணக்கு சரியாகபோடவில்லையென வகுப்பில் ஜெயப்பிரகாஷ்சை அடி பிச்சி எடுத்துள்ளார்.
 

 Not a ratchashi film teacher, but a real ratchashi teacher!


பிரம்பால் அடித்ததில் அந்த 8 வயது மாணவனின் உடலெல்லலம் ரத்தம் கட்டிக்கொண்டு வீங்கிப்போய்வுள்ளது. உடனே பக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் இருந்து ஐஸ்கட்டி வாங்கி வந்து ஒத்தடம் தந்து வகுப்பறையில் படுக்கவைத்தவர், மாலை பள்ளி முடிந்தபோது, இதைப்போய் வீட்டில் சொன்ன நாளைக்கும் அடிப்பன் எனச்சொல்லி அனுப்பியுள்ளார். அடிவாங்கிய அந்த பையன் வீட்டில் எதுவும் சொல்லாமல், விளையாட செல்லாமல் வந்து படுத்துக்கொண்டுள்ளான்.


அதன்பின் நடந்தவற்றை ஜெயப்பிரகாஷ்சின் அம்மா பரிமளா நம்மிடம் கூறும்போது, அந்த ஸ்கூல்ல படிக்கற இன்னொரு பையன் எங்கிட்ட வந்து சொன்னான். வீட்ல வந்து பார்த்தப்ப படுத்துக்கிட்டுயிருந்தான், அவன் சட்டையை கழட்டி பார்த்தப்ப ரத்தம் கட்டிக்கிட்டு அடிச்சி வடுயிருந்தது எனச்சொல்லி கண் கலங்கியவர், உடனே ஆஸ்பத்திரிக்கு தூக்கிம்போய் காட்டனன், ஊசிப்போட்டு மருந்து தந்தவங்க, பெட்ல சேர்க்கச்சொன்னாங்க. அதுக்குள்ள ஊர் தலைவர் ( முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ) கிருஷ்ணராஜ் உட்பட இன்னும் சிலர் வந்து பேசிக்கலாம்ன்னு சொல்லி அழைச்சிக்கிட்டு வந்துட்டாங்க. இரண்டு நாளா அழைச்சிட்டு போய் ஊசி போட்டுக்கிட்டு வந்தன். 

Not a ratchashi film teacher, but a real ratchashi teacher!


ஜீலை 16ந்தேதி ஊர்க்காரங்க பத்துப்பேர் ஸ்கூல்க்கு என்னை அழைச்சிட்டு போனாங்க. அந்த டீச்சரம்மா, கணக்கு போடல அதனால் வேப்பமரத்தில் இருந்து பச்சை குச்சியை உடைச்சி எடுத்துவந்து அடிச்சன்னு சொன்னாங்க. பச்சை குச்சியால அடிச்சா எப்படியிருக்கும்ன்னு நீங்களே நினைச்சிப்பாருங்க என்றவர், அந்தம்மா, அடிச்சன் அதுக்கு என்ன பண்ண சொல்றிங்க, எனக்கு கலெக்டர் ஆபிஸ்ல, கட்சியில ஆளுங்கயிருக்காங்க. என்னை ஒன்னும் பண்ண முடியாதுன்னு அங்க சொன்னாங்க. ஒரு மன்னிப்பு கேளுங்க, அந்தம்மா புகார் தரமாட்டாங்கன்னு சொன்னாங்க. ரொம்ப நேரம் ஒரு மன்னிப்பு கேட்கலைங்க. அதுக்கப்பறம் ஸாரின்னு சொல்லிட்டு ஸ்கூல் உள்ள போய்ட்டாங்க.


பிறகு அந்த டீச்சர், 1000 ரூபாய் ஊசி போடன்னு ஆள் மூலமா குடுத்து அனுப்பனாங்க. நல்லா அடிச்சிடுவாங்க, பிறகு ஆஸ்பத்திரி செலவுக்குன்னு பணம் தந்தா வாங்கிக்கிட்டு கம்முனு போய்டனும்னு நினைச்சியிருக்காங்க. ஒன்னுக்கிட்ட ஒன்னாகியிருந்தாலும் இப்படித்தான் பணம் தந்து சரிப்பண்ணுவாங்களா என கோபமாக கேட்டவர். அந்தம்மா என்பையனை மட்டும் இப்படி அடிக்கல.
 

 

Not a ratchashi film teacher, but a real ratchashi teacher!


இதுக்கு முன்னாடி 5வது படிக்கற தீபம்நகர் பையனை அடிச்சி ஒரு வாரம் ஸ்கூல் போகல. போன வருஷம் 2 வது படிச்ச இதே ஊர் பையனை கை மேலயே அடிச்சி, ஒன்னரை மாசம் ஸ்கூல் போகல. அந்தம்மா 14 வருஷமா இங்கயே டீச்சரா வேலை பார்க்கறாங்க. பக்கத்தலயிருக்கற சீலப்பந்தல் ங்கற கிராமத்தை சேர்ந்தவங்க. அதனால் தலைவருங்க, கவுன்சிலருங்க ஒருத்தருக்கு ஒருத்தர் முகத்தை பார்த்துக்கனும்மேன்னு எத்தனை முறை அடிச்சி பிரச்சனையானாலும் சமாதானம் செய்து அனுப்பிடறாங்க என்றவர்.


இன்னைக்கு பையன் உடம்புல அடிச்சயிடத்தல ரத்தம் கட்டியது லேசாயிருக்கு. இருந்தும் பையனை கூப்ட்டும் போய் விட்டன். என்னை வேற எங்கயாவது சேர்த்துவிடு, இதே ஸ்கூல்ன்னா போகமாட்டன்னு அழுதான். நாங்கயென்ன பணக்காரங்களா உடனே வேற ஸ்கூல் மாத்த. நாம தான் படிக்கல, புள்ளைங்களாவது படிக்கட்டும்ன்னு தான் அவ கத்தி அழ, அழ மனச தேத்திக்கிட்டு ஸ்கூல்ல விட்டன், பின்னாடியே ஓடிவந்தான். ஹெட்மாஸ்டரம்மா தான், அந்த டீச்சர் வரல, வான்னு அழைச்சிம் போனாங்க என்றார்.

அந்த பையனின் பாட்டி மற்றும் உறவினர்கள், ஒரு குழந்தைங்களை இப்படி அடிக்கற டீச்சரை இதுவரை நாங்க எங்க வயசுக்கும் பார்த்ததில்லை என்றார்கள்.

நாம் அந்த பள்ளிக்கு சென்றபோது, தலைமைஆசிரியர் அறையில் யாரும்மில்லை. அந்த டீச்சர் வரல என்றார்கள். இதுப்பற்றி முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, அதுப்பற்றி தகவல் வந்தது, இதுப்பற்றி மாவட்ட கல்வி அலுவலரை விசாரிச்சி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கசொல்லியுள்ளது என்றார்.


பள்ளி எப்படியிருக்க வேண்டும், ஆசிரியர்கள் மாணவ – மாணவிகளிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என தலைமையாசிரியராக ஜோதிகா நடித்த ராட்சசி என்கிற படம் வெளிவந்து பலதரப்பின் பாரட்டை பெற்றுள்ளது. அதில் ஜோதிகா ஏற்றுள்ள கதாபாத்திரம் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியரின் கதாபாத்திரம் தான். மாணவர்கள் மீது அக்கறையும், நலனும் கொண்டுள்ள பல ஆசிரியர்கள் உள்ள மாவட்டத்தில் குழந்தைகளிடம் வன்முறையை காட்டும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் வேதனைப்பட வேண்டும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.