Advertisment

''இன்னும் பல ஆடியோ இருக்கு... முதல்ல இந்த படம் ஓடட்டும்''-புகழேந்தி பேட்டி!

'Not only Ponnaiyan but there are many other conversations' - Pugahendi interview

அதிமுகவின் மூத்த உறுப்பினரான பொன்னையன் பேசியிருந்ததாக நேற்று வெளியாகியிருந்த ஆடியோ அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளது தன்னுடைய குரல் அல்ல, தான் பேசியது அல்ல, மிமிக்கிரி செய்யப்பட்டது என பொன்னையன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதேபோல் நாஞ்சில் கோலப்பன் சார்பில் ஆடியோவில் இடம்பெற்றுள்ளது பொன்னையனின் குரல் தான், நான் தான் அவருடன் பேசினேன் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

'Not only Ponnaiyan but there are many other conversations' - Pugahendi interview

இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி சென்னை பசுமைவழிச் சாலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசுகையில், ''எந்தெந்த மந்திரிகள் காலை பிடித்து கைது செய்யாமல் இருப்பதற்கு எப்படி எல்லாம் அழைகிறீர்கள் என்று எங்களுக்கு தானே தெரியும். பொன்னையன் மட்டுமல்ல இது போன்ற எங்களிடம் பல உரையாடல் உள்ளது. அவை எல்லாம் வெளியிடப் போகிறோம். உடனே விட்டால் படம் சரியாக இருக்காது. இந்த படம் முதலில் ஓடட்டும் அப்புறம் விடுகிறோம்'' என்றார்.

Advertisment

Pugazhendi admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe