Advertisment

“ஆளுநர் தாமதம் செய்வது நியாயம் அல்ல” - பாமக நிறுவனர் ராமதாஸ்

not fair for  governor delay online gambling act

தமிழகத்தில் இதுவரை ஆன்லைன் சூதாட்டத்திற்கு 38 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் கருமாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற பட்டதாரி இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில், பட்டதாரி இளைஞர் அருண்குமார் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர், “ தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 16 மாதங்களில் நிகழ்ந்துள்ள 39-ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம் காலாவதியான பிறகு சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

Advertisment

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராகப் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தொடர் போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் 73 நாட்களாகியும் அச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதம் செய்வது நியாயம் அல்ல. ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலைகளும், குடும்பச் சீரழிவுகளும் தொடர்கதையாகி வருகின்றன. சூழலின் அவசரத் தன்மையை உணர்ந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Ramadoss pmk governor Gambling
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe